சிவன் கோவில்களில் விமரிசை : அன்னாபிஷேகம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14நவ 2016 11:11
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் சிவன் கோவில்களிலும் நேற்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு வழிபட்டனர். ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் பவுர்ணமி அன்று சிவன் கோவிலில் மூலவருக்கு அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். மக்கள் பஞ்சம் பட்டினி இல்லாமல் அனைவருக்கும் அன்னம் கிடைக்கும் வகையில் இந்த பூஜை நடப்பதாக ைதீகம். இந்த மாதம் மழைகாலம் என்பதால் விவசாயம் நன்கு விளைந்து மக்கள் செழிப்புடன் வாழ வழி கிடைக்கும் என்று நம்பிக்கை இந்த வழிபாடு காலம் காலமாக நடந்து வருகிறது. சிவன் கோவிலில் மூலவர் லிங்கத்தின் மேல் அரிசி சாதத்தால் அலங்கரித்து தீபாரதனை முடிந்ததும் அந்த அன்னத்தை கோவில் குளத்தில் கரைத்தனர். அதனை தொடர்ந்து அபிஷேகம் நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும் ஏகாம்பர நாதர், கச்சபேஸ்வரர், சித்தீஸ்வரர், காசிபேஸ்வரர் சின்னகாஞ்சிபுரம் வியாச சாந்தலீஸ்வரர், அங்கிரேஸ்வரர், புண்ணிய கோட்டீஸ்வரர் மற்றும் மாவட்டத்தில் உள்ள சில கோவில்களில் அன்னாபிஷேகம் நடந்தது ஒரு சில கோவில்களில் இன்று நடக்கிறது.