பதிவு செய்த நாள்
16
நவ
2016
10:11
கீழக்கரை:வைணவ திவ்ய தேசங்கள் 108 உள்ளன. அவற்றில் 44வது இடத்தில் உள்ள திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் பத்மாஸனித்தாயார் கோயில் இடம் பெறுகிறது. ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பழமை வாய்ந்த பெருமாள் கோயில், கும்பாபிஷேகத்திற்காக காத்திருக்கும் நிலையில் உள்ளது. மார்கழி மாத காலத்தில் புல்லவர், கன்வர், காலவர் ரிஷிகளுக்கு பெருமாள் பிரசன்னமாகி அருள்பாலித்ததாக ஐதீகம். திருமங்கையாழ்வாரால் மங்களசாசனம் செய்யப்பட்டது. கடந்த 2003 பிப்., 12ல் கோலாகலமாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்து சாஸ்திர ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோயில் திருப்பணிகள் புனரமைப்பு செய்யப்பட்டு கும்பாபிஷேகம் செய்வது வழக்கம். ஆதிஜெகநாதப்பெரு மாள், பத்மாஸனித்தாயார், யோக நரசிம்மர், பட்டாபிஷேக ராமர், தெர்ப்ப சயன ராமர், சந்தானகோபால கிருஷ்ணன், ஆண்டாள், நாக தோஷம் பரிகார மண்டபம் உள்ளிட்ட சன்னதிகளும், கோயில் விமானங்களும் உள்ளன. கடந்த 2015ல் ஓராண்டிற்கு முன்பு கோயில் ராஜ கோபுர விமானங்கள், உட்பட 6 சன்னதி விமானங்களில் வண்ண பூச்சுகள் செய்யப்பட்டு, புதுப்பொலிவு பெற்ற நிலையில் உள்ளது. கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள், உபயதாரர்கள் கும்பாபிஷேகம், திருப்பணிகளுக்கு நிதியளிக்க காத்திருக்கின்றனர். 12 ஆண்டுகள் கழிந்த பின்னரும், கும்பாபிஷேகப்பணிகளில் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். எனவே, விரைவில் கும்பாபிஷேகத்திற்கான நாளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறோம். அரசு இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.