பதிவு செய்த நாள்
17
நவ
2016
11:11
தர்மபுரி: தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டையில், கால பைரவருக்கு தனி கோவில் அமைந்துள்ளது. தமிழகம், கர்நாடகா உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தேய்பிறை அஷ்டமி அன்று இங்கு வந்து கால பைரவரை வணங்கி செல்கின்றனர். தங்கள் வேண்டுதல் நிறைவேறிய பின், பக்தர்கள் சாம்பல் பூசணி தீபம் ஏற்றி நேர்த்தி கடன் செலுத்தி செல்கின்றனர். மேலும், கோவிலில் உள்ள, ஐந்து உண்டியல்களில் காணிக்கையாக பணம் மற்றும் தங்கம், வெள்ளியை பக்தர்கள் செலுத்தி வருகின்றனர். அதியமான் கோட்டை தட்சின காலபைரவர் கோவிலில், நகை சரிபார்ப்பாளர் உதவி ஆணையர் அங்கம்மாள், தக்கார் உதவி ஆணையாளர் நித்யா, ஆய்வாளர் சங்கர், செயல் அலுவலர் சங்கர் ஆகியோர் முன்னிலையில் நேற்று உண்டியல் எண்ணும் பணி நடந்தது. இதில் காணிக்கையாக, ஒன்பது லட்சத்து, 84 ஆயிரத்து, 908 எட்டு ரூபாயும், 12 கிராம் தங்கம், 145 கிராம் வெள்ளி இருந்தது.