திருவாரூர் கோவிலில் தியாகராஜரின் முகத்தை மட்டுமே தரிசிக்க முடியும். பாதத்தைப் பார்க்க முடியாது. ஆனால், இந்தக் கோவிலில் இருந்து மூன்று கி.மீ., துõரத்திலுள்ள விளமல் பதஞ்சலீஸ்வரர் கோவிலில் இவரது திருவடியைத் தரிசிக்கலாம். மூலவர் பதஞ்சலி மனோகரர் சன்னிதியில் லிங்கத்தின் முன்புறம் தியாகராஜரின் பாதம் இருக்கிறது. வியாக்ரபாதர் மற்றும் பதஞ்சலி முனிவர்களுக்காக திருவாரூரில் முகத்தைக் காட்டிய தியாகராஜர், இங்கு பாத தரிசனம் காட்டியதாக ஐதீகம். பொதுவாக கஜலட்சுமி கால்களை மடித்து சம்மணம் இட்டு அமர்ந்திருப்பதே வழக்கம். இக்கோவிலிலுள்ள கஜலட்சுமி இரண்டு கால்களையும் தொங்கவிட்டு அமர்ந்திருப்பதால் அவளது பாத தரிசனம் காணலாம். சண்டிகேஸ்வரர் வலது காலை குத்துக்காலிட்டு அமர்ந்திருப்பது சிறப்பம்சம்.