மருத்துவ தெய்வமான தன்வந்திரிக்கு தமிழகத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக கோயில்கள் இல்லை. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், சீர்காழி அருகிலுள்ள வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய் தலம்), நாமக்கல் அருகில் மோகனூரில் உள்ள கல்யாண வெங்கட்ரமணர் ஆகிய கோவில்களில் இவருக்கு சன்னிதி இருக்கிறது. வேலூர், மதுரை பொன்மேனி பகுதியில் தனிக்கோவில் கட்டப்பட்டுள்ளது. தன்வந்திரி கோவில்கள் பல தனியாராலேயே நடத்தப்படுகிறது.