பதிவு செய்த நாள்
23
நவ
2016
11:11
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், சோமவார சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது. பொள்ளாச்சி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், கார்த்திகை மாத சோமவாரத்தையொட்டி, 1008 சங்காபிேஷம் பூஜை நடந்தது. அபிேஷக நீர் நிரப்பப்பட்ட 1008 சங்குகள் சிவலிங்க வடிவில் வைக்கப்பட்டு பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
பொள்ளாச்சி தாலுகா அலுவலகம் அருகே மாகாளியம்மன் கோவிலில், கார்த்திகை மாத சோமவாரத்தையொட்டி, 108 சங்காபிேஷகம் விழா நேற்றுமுன்தினம் மாலை நடந்தது. விழாவையொட்டி, சிறப்பு அபிேஷகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதுபோன்று பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தது. வால்பாறை: வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு இந்த ஆண்டு முதல் கார்த்திகை மாதம் ஒவ்வொரு திங்கள் கிழமையும், 108 சங்காபிேஷகமும், மஹா ம்ருத்யுசூஜய ேஹாமமும் நடைபெறுகிறது. நேற்று முன்தினம் மாலை, 6.00 மணிக்கு துவங்கிய சங்காபிேஷக விழாவையொட்டி காசிவிஸ்வநாதருக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடைபெற்றது. அதன் பின்னர் 108 சங்காபிேஷகத்திற்கு, சிறப்பு ேஹாமமும் நடைபெற்றது. இதில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.