பதிவு செய்த நாள்
08
அக்
2011
11:10
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில், நவராத்திரி விழாவின் கடைசி நாளான நேற்று "மகர் நோன்பு விழா நடந்தது. அரண்மனையிலிருந்து ராஜ ராஜேஸ்வரியம்மன் தங்க சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, கேணிக்கரை மகர் நோன்பு பொட்டலுக்கு புறப்பட்டார். பரிகார தெய்வங்களான ராமநாதபுரம் கோட்டை வாசல் விநாயகர், வனசங்கரி அம்மன், உதிரகாளியம்மன், கோதண்டராமர், குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி, சொக்கநாத சுவாமி, வெளிப்பட்டணம் முத்தாலம்மன், தர்ம தாவள விநாயகர், காட்டுப்பிள்ளையார் கோயில் ஐயப்பன், கன்னிகா பரமேஸ்வரியம்மனுடன் சென்றார். பின்னர் அம்பு விடும் நிகழ்ச்சி நடந்தது.