திடியன் கைலாசநாதர் கோயிலில் தீபத்திருவிழா ஏற்பாடுகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05டிச 2016 01:12
செல்லம்பட்டி: கார்த்திகை தீபத்திற்காக திடியன் பெரிய நாயகி கைலாசநாதர் கோயிலில் முன்னேற்பாடுகள் நடக்கிறது.
உசிலம்பட்டி தாலுகா திடியன் மலையடிவாரத்தில் உள்ள கைலாசநாதர் கோயிலில் 14 சீடர்களுடன் கூடிய தட்சிணாமூர்த்தி உள்ளார். மலை உச்சியில் தங்கமலை ராமர் கோயில் உள்ளது. மலையடிவாரத்தை சுற்றிலும் பெருமாள், குலதெய்வ கோயில்கள் ஆங்காங்கே உள்ளன. பவுர்ணமி தோறும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். கார்த்திகை தீபத்திருநாளில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் டிச.12 திங்கள் மாலை 6:05 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. அர்ச்சகர் வெங்கிடு கூறியதாவது: தீபம் ஏற்றுவதற்கான கொப்பரை சுத்தம் செய்யும் பணி நடக்கிறது. 175 லிட்டர் நெய், சுமார் 70 மீட்டர் நீளம் கொண்ட திரி முதலியவை கொண்டு தீபம் ஏற்றப்படும். பக்தர்கள் இதற்கு தேவையான நெய், திரி தந்து தீபத்திருவிழாவில் பங்கு பெறலாம் என்றார்.