பதிவு செய்த நாள்
05
டிச
2016
01:12
உடுமலை: உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் சோமவாரக்கிழமைகளில் சங்காபிஷேகம் நடைபெறுகிறது. இதன்படி இன்று காலை, 9:30 மணிக்கு விநாயகர் பூஜை, சங்கு பூஜையும், காலை 11:00 மணிக்கு, 108 வலம்புரி சங்காபிஷேகமும், பகல், 12:00 மணிக்கு சிறப்பு அலங்காரமும் இடம் பெறுகின்றன.
ஏரிப்பாளையம்: உடுமலை ஏரிப்பாளையம் சித்தாண்டீஸ்வரர் கோவிலிலும் இன்று கார்த்திகை மாத 108 வலம்புரி சங்காபிஷேகம், மாலை, 4:00 மணியளவில் நடைபெறுகிறது.
தில்லைநகர்: உடுமலை தில்லைநகரில் ரத்தினாம்பிகை உடனமர் ரத்தினலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின் முதலாம் ஆண்டு திருநெறிய தீந்தமிழ் ஓதி சங்காபிஷேக
பெருவிழாவையொட்டி, இன்று மாலை, 3:30 வேள்வியும், மாலை, 5:30 மணிக்கு சங்காபிஷேகம், அபிஷேகம், அலங்காரம், பேரொளி வழிபாடு போன்றவை இடம்பெறுகின்றன.
கடத்துார்: மடத்துக்குளம் அருகே கடத்துார் அர்ச்சுனேசுவரர் கோவிலில், கார்த்திகை மாதம் சோமவார திங்கட்கிழமையன்று, 108 சங்காபிஷேக பூஜை நடப்பது வழக்கம். இன்று, மாலை 4:00 மணிக்கு இந்த பூஜை தொடங்குகிறது. சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.