கண்ணமங்கலம்: கண்ணமங்கலம் அருகே, முனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், கண்ண மங்கலம் அருகே மோட்டுப்பாளையம் கிராமத்தில், புதியதாக கட்டப்பட்டுள்ள முனீஸ்வரன் கோவில் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை, கோபூஜை, இரண்டாம் கால யாக சாலை பூஜை உட்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, முனீஸ்வரன் சிலைக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதே போன்று சந்தவாசல் கிராமத்தில் ஆத்ம ஐயப்ப சுவாமி கோவில் புனரமைக்கப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு மங்கல இசை, வேதபாராயணம், இரண்டாம் யாகசாலை பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.