மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் திருவண்ணாமலை கோவில் கோபுரங்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05டிச 2016 01:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழாவை முன்னிட்டு, ஒன்பது கோபுரங்களும் மின் விளக்கு அலங்காரத்தால் ஜொலிக்கிறது. திருவண்ணாமலை அருணா சலேஸ்வரர் கோவில், 25 ஏக்கரில் உள்ளது. இதில், ஒன்பது கோபுரங்கள், 63 சன்னிதிகள் உள்ளன. தீப திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகம், அனைத்து சன்னிதிகள், ஒன்பது கோபுரங்களும் மின் விளக்குளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. மேலும், ஸ்தல விருட்சமான மகிழ மரம், சுவாமி அலங்காரம் செய்யப்படும் கல்யாண மண்டபம் உள்ளிட்ட இடங்களிலும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இவை பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக உள்ளது. கோபுரத்தில் செய்யப்பட்டுள்ள மின் விளக்கு அலங்காரம், சுற்றியுள்ள, 25 கி.மீ தூரம் வரை தெரியும். கடந்த ஆண்டு கும்பாபிஷேக பணி முடிவடையாததால், மின் விளக்கு அலங்காரம் ய்யப்படவில்லை.