தென்காசி : தென்காசி தட்சிணாமூர்த்தி கோயிலில் லட்சார்ச்சனை நடந்தது. தென்காசி ஆயிரப்பேரி ரோட்டில் குருதட்சிணாமூர்த்தி சைவ சித்தாந்த மடாலயத்தில் நேற்று லட்சார்ச்சனை விழா நடந்தது. இக்கோயிலில் காலை 5 மணிக்கு அபிஷேகம், 8 மணிக்கு லட்சார்ச்சனை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் ஆகியன நடந்தது. சிறப்பு பூஜை வழிபாடுகளும் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.