விருதுநகர்: சத்திரரெட்டியபட்டி வரதராஜ பெருமாள் கோயிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலை பூஜை நேற்று நடந்தது. இன்று காலை ௯ மணிக்கு கும்பாபிஷேகம்நடைபெறுகிறது. இதனையொட்டி தளிகை, நைவேத்யம், மகா தீபாராதனை, வேத திவ்ய பிரபந்த சாத்துமுறை, பஞ்ச தரிசனம் நடைபெறும். காலை 10 மணிக்கு ததியாராதனம் நடைபெறும். மாலை 4 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறும். மாலை 6 மணிக்கு மேல் சுவாமி கருட வாகனத்தில் வீதி வலம் வருதல் நடைபெறவுள்ளது.