பதிவு செய்த நாள்
09
டிச
2016
12:12
ஓமலூர்: பூசாரிப்பட்டியில், நேற்று தீர்த்தக்குட ஊர்வலம் கோலாகலமாக நடந்தது. காடையாம்பட்டி ஒன்றியம், பூசாரிப்பட்டி, கோவிந்தகவுண்டனூர் செல்லும் வழியில் உள்ள ராஜகணபதி, எல்லை ராஜகாளியம்மன், வன காளியம்மன் ஆலயம், சமீபத்தில் புனரமைக்கப்பட்டது. அங்கு, இன்று காலை, 6:00 முதல், 7:30 மணிக்குள், கும்பாபி?ஷகம் நடக்கிறது. அதையொட்டி, நேற்று காலை, கோவில் வளாகத்தில் சிறப்பு யாக பூஜை நடந்தது. தொடர்ந்து, பூசாரிப்பட்டி தேசிய நெடுஞ்சாலை அருகே, கந்தமாரியம்மன் கோவிலில் இருந்து, மேள, தாளம் முழங்க, கோபுர கலசங்கள், தீர்த்தக்குடங்கள், முளைப்பாரிகள் எடுத்துக்கொண்டு, 200க்கும் மேற்பட்ட பக்தர்கள், ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.