சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த பெருமணம் பெரியாண்டவர் கோவிலில் லட்சார்ச்சனை நடந்தது. இதையொட்டி காலையில் பெரியாண்டவர் மற்றும் கன்னிமார் சுவாமிகளுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சா மிர்தம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர், பல்வேறு வகை பூக்களால் சுவாமிக்கு லட்சார்ச்சனை நடந்தது. விழா ஏற்பாடுகளை பெருமணம் ராஜா அய்யர், சென்னை கிரி அய்யர், சென்னை வைத்தியநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.