கருவடிக்குப்பம் கோமதா கோவிலில் பரமாச்சாரியார் ஆராதனை விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26டிச 2016 02:12
புதுச்சேரி: கருவடிக்குப்பம் கோமதா கோவிலில் பரமாச்சாரியார் ஆராதனை விழா நடந்தது. கருவடிக்குப்பம் கோமதா கோவிலில், காஞ்சி பரமாச்சாரியார் சந்திரசேகர சுவாமிகள் ஆராதனை விழாவையொட்டி, நேற்று அதிகாலை கோபூஜை, அஸ்வ பூஜை நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு வேதபாராயணம் நாராயண மாஹாமந்திர ஜபம் மற்றும் ஆராதனை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், பிரமான சங்கத்தலைவர் கல்யாணம் சர்மா, சுரேஷ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை சங்கர பக்த சபா நிறுவனர் ராஜா சாஸ்திரிகள் செய்திருந்தார்.