சேத்துார்: சேத்துார் மேட்டுப்பட்டி செல்வ விநாயகர் கோயிலில் சபரிமலை ஐயப்பா சேவா சங்க 38 ம் ஆண்டு மண்டல பூஜை விழா நடந்தது.காலையில் சிறப்பு யாகம் நடந்தது.மதியம் அன்னதானம் மாலையில் ஐயப்பன் வீதி உலா நடந்தது.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். ஏற்பாடை சுந்தரராஜ் தலைமையிலானவர்கள் செய்திருந்தனர்.
*மேட்டுப்பட்டி ஸ்ரீஹரிஹரசுதன் ஐயப்பா சேவா சங்கத்தின் சார்பில் 15 ம் ஆண்டு மண்டல பூஜை விழா நடந்தது.காலையில் விநாயகர், மாரியம்மன்,ஐயப்பனுக்கு 21 வகையான அபிஷேகங்கள் நடந்தது.தொடர்ந்து பஐனை நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் ஐயப்ப சுவாமி அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏற்பாட்டை குருநாதர் தில்லையம்பலசுவாமி மற்றும் பலர் செய்திருந்தனர்.
*மேட்டுப்பட்டி ஸ்ரீஹரிஹர சுதன் ஐயப்பா அன்னதானக்குழு சார்பில் மண்டல பூஜை விழா நடந்தது.மேட்டுப்பட்டியில் உள்ள ஐயப்ப சுவாமி கோயிலில் சிறப்பு யாகசாலை பூஜை நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடை ஐயப்பா குருநாதர் முனியாண்டி மற்றும் அன்னதானக்குழுவினர் செய்திருந்தனர். எட்டாம் ஆண்டு கன்னி பூஜை: ராஜபாளையம் ஆவரம்பட்டி சபரிகிரிவாசன் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் எட்டாம் ஆண்டு கன்னிபூஜை ,அன்னதானம் வீதி உலா நடந்தது. முதல் நாள் நடந்த வீதி உலா நிகழ்ச்சிக்கு குத்து விளக்கேற்றுதலுடன் துவங்கி சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. செண்டை மேளம் முழங்க அலங்கரிக்கப்பட்ட யானை மீது சுவாமி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சுற்றி காளியம்மன் கோயில் அருகில் உள்ள திடல் வந்தடைந்தது. இரண்டாம் நாள் பூஜை மற்றும் அன்னதானத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சபரிகிரிவாசன் ஐயப்ப சேவா சங்கத்தினர் செய்தார்.
* ராஜபாளையம் பாரதிநகர் சித்தி விநாயகர் கோயிலில் 26 ம் ஆண்டு ஐயப்ப சுவாமி பஜனை மூன்று நாள் கொண்டாடப்பட்டது. முதல் நாள் 108 திருவிளக்கு பூஜை ராம்கோ குரூப் சேர்மன் ராமசுப்பிரமணியராஜா தலைமையில் நடந்தது. இரண்டாம் நாள் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கடைசி நாள் அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை பாரதிநகர் ஐயப்ப சேவா சங்கத்தனர் செய்தனர்.