பதிவு செய்த நாள்
02
ஜன
2017
11:01
திருப்பதி:புத்தாண்டு தினமான நேற்று, திருமலையில், பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது.ஆங்கில புத்தாண்டில், திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க, ஒரு லட்சத்திற்கும் மேலான பக்தர்கள் வருவது வழக்கம். ஆனால், தேவஸ்தானம், இம்முறை புத்தாண்டின் போது, பல தரிசனங்களை ரத்து செய்தது. சில கட்டுப்பாடுகளையும் விதித்தது. இதனால், திருமலைக்கு, வி.ஐ.பி.,க்கள் வருகை குறைவாக இருந்தது.நேற்று அதிகாலை, 1:15 மணிக்கு துவங்கிய தரிசனம், 2:40 மணிக்கு நிறைவு பெற்றது. அதன்பின், தர்ம தரிசனம் துவங்கியது.காத்திருப்பு அறைகளில் நீண்ட நேரம் காத்திருக்காமல், பக்தர்கள் சில மணி நேரங்களில், ஏழுமலையானை தரிசித்தனர்.புத்தாண்டை ஒட்டி, திருமலை முழுவதும் மின் விளக்கு மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.