பதிவு செய்த நாள்
03
ஜன
2017
12:01
புள்ளலுார்: பழமை வாய்ந்த கல்வெட்டு கற்களை, கிராமவாசிகள் காவல் தெய்வமாக வணங்கும் அதிசயம், புள்ளலுார் கிராமத்தில் நிகழ்ந்து வருகிறது என, அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் தெரிவித்தனர். காஞ்சிபுரம் அடுத்த, புள்ளலுார் கிராமத்தில், ஊருக்கு நடுவில் பழமை வாய்ந்த கல்வெட்டு உள்ளது. இந்த கல்வெட்டில், ஸ்ரீசக்கரத்திற்குள் சில வட மொழி எழுத்துகள் மற்றும் இந்து மத குறியீடுகள் உள்ளன. இந்த கல்வெட்டு சில ஆண்டுகளுக்கு முன், தரையில் பாதி புதைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன், அந்த இடத்தை சிறிய அளவில் கட்டுமானத்தை எழுப்பி, திண்ணைக்கோவிலாக அப்பகுதிவாசிகள் வழிபட்டு அதிசயம் நிகழ்த்தி வருகின்றனர். எங்கள் கிராமத்திற்கு முன்பொரு காலத்தில், வாந்தி, பேதி, காலரா உள்ளிட்ட கொடிய நோய்கள் கால்நடைகளை தாக்கின. இதனால், பலரின் மாடுகள் இறக்க நேரிட்டது. அப்போது, தரையில் கிடந்த இரண்டு கற்களை எடுத்து, அபிேஷகம் செய்து, வேண்டுதல் முன் வைத்ததால், நோய்களின் தாக்கம் குறைந்தது. அதனால், கோவில் கட்டி வழிபட்டு வருகிறோம். கிராமவாசிகள், புள்ளலுார்