ஆருத்ரா தரிசன விழா: ராமேஸ்வரம் மூன்றாம் பிரகாரத்தில் மாணிக்கவாசகர் உலா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜன 2017 11:01
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக நடைபெற்றுவருகிறது. விழாவையொட்டி, மூன்றாம் பிரகாரத்தில் மாணிக்கவாசகர் பல்லக்கில் வலம் வந்தது அருள்பாலித்தார்.
ஜன.,11ல் ராமேஸ்வரம் கோயிலில் ஆருத்ரா தரிசனம் நடக்க உள்ளதால், நேற்று (ஜன.,3) கோயிலில் மாணிக்கவாசகர் பல்லக்கில் புறப்பாடாகி கோயில் மூன்றாம் பிரகாரத்தில் ஊர்வலமாக வந்து சபாபதி சன்னதி முன்பு எழுந்தருளி திருவாசகம் பாடல்கள் பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து 8 நாட்கள் மாணிக்கவாசகர் புறப்பாடு உற்சவம் நடக்கிறது.இதன் பின் 9ம் நாளான ஜன.,11ல் சபாபதி சுவாமி, மாணிக்கவாசகருக்கு ஆருத்ரா தரிசனத்தில் காட்சியளிப்பார்.