தருமத்துப்பட்டியில் பூக்குழி இறங்கிய ஐயப்ப பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜன 2017 11:01
கன்னிவாடி: தருமத்துப்பட்டியில் விரதமிருந்த ஐயப்ப பக்தர்கள் நேற்று பூக்குழி இறங்கினர். தருமத்துப்பட்டி தர்மசாஸ்தா ஐயப்ப பக்தர்கள் குழுவினர், ஆண்டுதோறும் மாலையணிந்து சபரிமலை செல்கின்றனர். இந்தாண்டு முதன்முதலாக பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் திருவிழா நடத்தினர். இதற்காக, வடக்குத்தெரு காளியம்மன் கோயில் முன்பு, நேற்று காலை அக்னிகுண்டம் வளர்க்கப்பட்டது. குருசாமி கணேசன் தலைமையிலான குழுவினர், கிராம கோயில்களில், ஊர்வலமாக வந்து அபிஷேக, ஆராதனைகள் நடத்தினர். சிறப்பு பூஜைகளுக்குப்பின், குருசாமி தலைமையில் பக்தர்கள், பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில், சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். அன்னதானமும் நடந்தது.