Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ... மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) தொழிலில் போட்டி! பெறுவீர்கள் வெற்றி! மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 ...
முதல் பக்கம் » தை ராசி பலன் (15.1.2026 முதல் 12.2.2026 வரை)
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) பணப்புழக்கம் கூடும்
எழுத்தின் அளவு:
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) பணப்புழக்கம் கூடும்

பதிவு செய்த நாள்

11 ஜன
2017
03:01

வாழ்க்கையை ரசித்து அனுபவிக்கும் மீன ராசி அன்பர்களே!

கடந்த மாதத்தை விட கூடுதல் பலன்களை எதிர்பார்க்கலாம். உங்கள் நட்புக்கிரகமான சூரியன் 11ம் இடத்தில் இருகிறார். இது மிகவும் சிறப்பான நிலை. சுக்கிரன் ஜன.27க்கு பிறகு நற்பலனைக் கொடுப்பார். ராகு, புதன் மாதம் முழுவதும் நன்மை தருவார்கள். இதனால் எந்த ஒரு திட்டத்தையும் துரிதமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். அரசின் உதவி கிட்டும். குரு ஜன.27ல், 8ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது அவ்வளவு சிறப்பான நிலை. குரு பகவான் பொதுவாக மன வேதனையையும், நிலையற்ற தன்மையையும் கொடுப்பார். பொருளாதார சரிவை ஏற்படுத்துவார். வீண் விரோதத்தை உருவாக்குவார். பல்வேறு தொல்லைகளைக் கொடுப்பார். ஆனால் இதனைக் கண்டு நீங்கள் அஞ்ச வேண்டாம். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7ம் இடத்து  பார்வை உங்களுக்கு சாதகமாக உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். ஜன.30க்கு பிறகு  குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எடுத்த செயல் வெற்றி அடையும். சகோதரிகள் வகையில் பொருள் சேரும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஜன.27,28,29ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் பிப்.7,8ல் உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.

பணியாளர்களுக்கு சக பெண் ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். பதவி உயர்வுக்கு தடை வராது. கோரிக்கைகள் நிறைவேறும். அரசு ஊழியர்கள் புதிய தெம்புடன் காணப்படுவர். ஜன.25,26ல் உன்னதமான பலன்களை எதிர்பார்க்கலாம். தனியார்துறை ஊழியர்களுக்கு எதிர்பார்த்ததை விட அதிக சலுகை கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் பெயர் நிலைநாட்டப்படும் வகையிலான சம்பவம் நிகழும்.

தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு நல்ல லாபம் வரும். ஜன.30க்கு பிறகு பொருளாதார வளம் மேம்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். பெண்களைப் பங்குதாரராகக் கொண்ட தொழில் மிகவும் வளர்ச்சி அடையும். வீண் விரயம் இனி இருக்காது. ஜன.15,16, பிப்.11,12ல் மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.  ஜன.30,31, பிப்.3,4ல் சில பிரச்னைகள் வரலாம். இந்த நாட்களில் பண விவகாரத்தை நீங்களே நேரில் கண்காணிப்பது நல்லது. ராகு உங்களுக்கு எண்ணற்ற நன்மைகளைச் செய்து கொண்டு இருக்கிறார். குறிப்பாக முயற்சிகளில் வெற்றியைத் தருவார். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெற்று இருக்கிறீர்கள். உங்கள் ஆற்றல் மேம்படும்.

கலைஞர்கள் அதிகமாக முயற்சி செய்து புதிய ஒப்பந்தங்களை பெற வேண்டியது இருக்கும். போட்டிகள் அதிகரிக்கும். ஜன.27க்கு பிறகு முன்னேற்றம் ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் நல்ல பணப் புழக்கத்தில் இருந்தாலும் எதிர்பார்த்த பலன் கிடைக்காது. ஜன.14, பிப்.9,10ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்களுக்கு படிப்பில் இருந்த பிற்போக்கான நிலை இந்த மாதம் மாறும். புதனால் கல்வி வளம் சிறக்கும்.

ஆசிரியர்களின் ஆலோசனை கிடைக்க பெறுவீர்கள். படிப்பு தவிர பிறதுறைகளிலும் முன்னேற வாய்ப்புண்டு.

விவசாயம் சிறக்கும். கால்நடை வகையில் எதிர்பார்த்த லாபத்தை காணமுடியாது. புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிபோகும் வழக்கு
விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.

பெண்கள் குடும்பத்தாரிடம் நன்மதிப்பைப் பெறுவர். உங்களால் வீட்டிற்கு பெருமை கிடைக்கும். பணவரவு இருக்கும். சொந்தபந்தங்கள் வருகை உண்டு.  வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனைப் பெறுவர். சுயதொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கிக் கடன் எளிதாக கிடைக்கும். ஜன.1,2ல் சகோதரர்கள் வழியில் பணம் கிடைக்கும் விருந்து, விழா என சென்று வருவீர்கள். பிப்.5,6ல் காரிய அனுகூலம் ஏற்படும்.
புத்தாடை, நகை வாங்கலாம். ஜன.17,18,19ல் அக்கம் பக்கத்தினரால் நற்சுகம் ஏற்படும். உடல்நிலை நன்றாக இருக்கும்.

நல்ல நாள்: ஜன.15,16,17,18,19,25,26,27, 28,29, பிப். 1,2,5,6,11,12

கவன நாள்: ஜன. 20,21 சந்திராஷ்டமம். இந்த காலத்தில் வீண்விவாதங்களை தவிர்த்து இறைவழிபாட்டில் கவனம் செலுத்தவும்.

அதிர்ஷ்ட எண்: 1,9  நிறம்: சிவப்பு, பச்சை

பரிகாரம்: செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் முருகனை வழிபட்டு வாருங்கள். ராகு காலத்தில் நடக்கும் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள். சனிக்கிழமைகளில் ராமபிரானுக்கு துளசிமாலை அணிவித்து வழிபடுங்கள்.

 
மேலும் தை ராசி பலன் (15.1.2026 முதல் 12.2.2026 வரை) »
temple news
மேஷம்: அசுவினி..: தை பிறந்தால் வழி பிறக்கும் என்று காத்திருந்தவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். ... மேலும்
 
temple news
ரிஷபம்: கார்த்திகை 2,3,4 ம் பாதம்:  சுயமாக சிந்தித்து வெற்றி பெறும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் ... மேலும்
 
temple news
மிதுனம்: மிருகசீரிடம் 3,4 ம் பாதம்:தன்னம்பிக்கையுடன் செயல்படும் உங்களுக்கு பிறக்கும் தை மாதத்தில் ... மேலும்
 
temple news
கடகம்: புனர்பூசம் 4 ம் பாதம்: நாளை வருவதை முன்னதாக அறிந்து செயல்படும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் ... மேலும்
 
temple news
சிம்மம்: மகம்..: தெய்வமே துணை என்ற எண்ணமுடன் வாழும் உங்களுக்கு,  பிரகாசமான மாதமாக தை இருக்கும். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar