சபரிமலை: சபரிமலை பயணத்திற்காக முதல் பயணிகள் ஹெலிகாப்டர், நேற்று காலை நிலக்கல்லில் தரை இறங்கியது. சபரிமலை வரும் பக்தர்கள் வசதிக்காக, முக்கிய இடைதங்கும் இடமான நிலக்கல்லில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு ஹெலிபேடு அமைத்துள்ளது. இரட்டை இயந்திரம் கொண்ட ஹெலிகாப்டர் இறங்கும் வகையில் இந்த ஹெலிபேடு சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. முதல் தனியார் ஹெலிகாப்டர் நேற்று காலை, 9:45 மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, காலை, 10:15 மணிக்கு நிலக்கல்லில் வந்தடைந்தது. திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் கோபாலகிருஷ்ணன், உறுப்பினர் அஜய் தரயில் ஆகியோர் இதில் வந்தனர். பைலட் கே.எம்.ஜி.நாயர் ஹெலிகாப்டரை இயக்கினார்.