பொங்கல் நன்னாளில் கரும்பைச் சுவைத்து மகிழ்கிறோம். இதற்கான காரணத்தை தெரிந்து கொள்வது அவசியம். கரும்பு நுனியில் உவர்ப்பாகவும், அடி நோக்கிச் செல்லச் செல்ல இனிப்பாகவும் இருக்கும். மனித வாழ்வும் இதைப் போன்றதே. இளமையை உழைப்பிற்கான காலமாகவும், முதுமையை பயனை அனுபவிக்கும் இனிப்பான காலமாகவும் அமைத்துக் கொள்ள வேண்டும். உவர்ப்புச் சுவை உழைப்பின் குறியீடு. இளமையில் உழைத்தவன் வயதான காலத்திலும் வியாதி இல்லாமல் நலமுடன் இருப்பான். அவனிடம் பொருளாதார வளம் நிறைந்திருக்கும். இளமையில் கஷ்டப்பட்டு உழைக்க தயங்கக் கூடாது. இதை உணர்ந்து பொங்கலன்று கரும்பைச் சுவைக்க வேண்டும்.