திருக்கனுார்: செட்டிப்பட்டு புதுநகரில் உள்ள செல்வ விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு புதுநகரில அமைந்துள்ள செல்வ விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. இதனையொட்டி, கடந்த 13ம் தேதி காலை 10:00 மணிக்கு விநாயகர் பூஜை, கணபதி ஹோமமும், 14ம் தேதி காலை 10:00 மணிக்கு முதல் கால யாக வேள்வி ஆரம்பம், 108 மூலிகைகளால் வேள்வியும், மாலை 4:00 மணிக்கு இரண்டாம் கால யாக வேள்வி, வேத பாராயணம் நடந்தது. 15ம் தேதி காலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாக வேள்வி, நாடி சந்தனம், கடம் புறப்பாடு நடந்தது. காலை 8:45 மணிக்கு செல்வ விநாயகர் சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.