பிறந்த குழந்தைக்கு நாவில் தேன் அல்லது இனிப்பு கலந்த தண்ணீர் தொட்டு வைக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது. இதற்கு சேணை தொட்டு வைக்கும் சடங்கு என்று பெயர். ஒழுக்கத்தில் சிறந்து விளங்கி, சமூகத்தில் நற்பெயர் பெற்ற பெரியவர் ஒருவரை, குழந்தையின் நாக்கில் தேன் தொட்டு வைக்கும்படி செய்வர். இவ்வாறு செய்வதால் அவரது நற்குணங்கள் குழந்தைக்கும் இருக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இவ்வாறு செய்வதுண்டு. சரி! எதற்காக இந்த சடங்கிற்கு இப்பெயர் தெரியுமா? சேணை என்றால் புத்தி என்று பொருள். புத்திமானாகவும், நல்லவராகவும் இருக்கும் பெரியவர், குழந்தையின் வாயில் தேன் தொட்டு வைத்தால், குழந்தையும் புத்திமானாக இருக்கும் என்பது நம்பிக்கை.