ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே கொக்கூரணியில் பிரசித்திபெற்ற புனித செபஸ்தியார் தேவாலயம் உள்ளது. கடந்த மூன்றாண்டுகளாக இரு பிரிவினரிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக இந்த சர்ச் திறக்கப்படாமல் பூட்டியே கிடந்தது. இந்நிலையில், சுமூக தீர்வு ஏற்பட்டதை தொடர்ந்து சிவகங்கை மறை மாவட்ட ஆயர் சூசைமாணிக்கம், முதன்மைகுரு ஜோசப் லுார்துராஜா தலைமையிலான பாதிரியார்கள் நேற்று சிறப்பு திருப்பலி நடத்தி சர்ச்சை திறந்தனர். இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.