பெரியகுளம்: பெரியகுளம் சீரடி சாய்பாபா கோயிலில், நிகும்பல யாகம், இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. சியாமளா தலைமையில், சிங்கமுக ப்ரத்தியங்கிரா தேவியின் நிகும்பல யாகம் நடந்தது. யாகத்தினால் பக்தர்களுக்கு சகல ஐஸ்வர்யம் கிடைக்கும். டாக்டர்கள் முத்துவிஜயன், தினேஷ் ஆகியோர் தலைமையில் 15 டாக்டர்கள், பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளித்தனர். சீரடி சாய்பாபா சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். ஏற்பாடுகளை வர்த்தக பிரமுகர் நியான் முத்துமகேஸ் செய்திருந்தார்.