வில்வம், துளசி இவற்றை உபயோகித்த பின்னும் மீண்டும் நீர் தெளித்து பயன்படுத்தலாமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜன 2017 02:01
நிர்மால்யம் என்பது பழைய பூக்களைக் குறிக்கும். பழைய புஷ்பங்களை இறைவனுக்குப் போடக்கூடாது. அதைவிட முக்கியம், புதிய பூக்கள் போடவில்லை என்றாலும் பரவாயில்லை; பழைய பூக்களை தினசரி எடுத்துவிட வேண்டும். வில்வத்துக்கும் துளசிக்கும் உள்ள விசேஷமான ஒரு மகிமை, ஒரு வாரம் அவற்றுக்கு நிர்மால்ய தோஷம் கிடையாது. ஒரு வாரத்துக்கு துளசி, வில்வத்தை எடுத்து நீர் தெளித்து அவற்றை பகவானுக்குப் போடலாம்.