கடலில் ஸ்நானம் செய்வது கங்கையில் ஸ்நானம் செய்வதற்கு ஒப்பானதா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜன 2017 02:01
சமுத்திர ஸ்நானம் எல்லா நாட்களும் செய்யக் கூடாது. அமாவாசை, கிரகண காலங்கள், மாதப் பிறப்பு இந்தக் காலங்களில்தான் செய்யலாம். மற்ற நாட்களில் சமுத்திர ஸ்நானம் கூடாது. சமுத்திர ஜலத்தைத் தொட்டாலே ஸ்நானம் செய்யணும் என்று சொல்கிறது சாஸ்திரம். வருஷம் 365 நாளும் சமுத்திரத்தில் ஸ்நானம் செய்யலாம் என்று சொல்லக்கூடிய ஒரே இடம் தனுஷ்கோடி மட்டும்தான். ராம சேது என்று சொல்லக்கூடிய தனுஷ்கோடியில்தான் சமுத்திரத்துக்கு தோஷம் கிடையாது. ஆனால், சமுத்திர ஸ்நானம் என்பது விசேஷம்தான். கங்கை எப்படி சரீரத்தை சுத்தம் செய்யுமோ, அதுபோல்தான் சமுத்திரமும். இருந்தாலும் கங்கை கங்கைதான். கங்கைக்கு சமானமாக வேறு எதையும் சொல்ல இயலாது.