பங்குனி உத்திரம் தந்தை சிவனுக்கும், தைப்பூசம் மகன் முருகன், வள்ளிக்குமான திருமண நன்னாள். அது மட்டுமல்ல! மார்கழி திருவாதிரையன்று சிவன் நடராஜராக தனித்து நடனமாடுகிறார். தைப்பூசத்தன்று மகனின் திருமணத்தைக் கண்ட மகிழ்ச்சியில், சிவனும் பார்வதியும் இணைந்து நடனமாடும் நன்னாளாகவும் உள்ளது. அது மட்டுமல்ல! விநாயகரும் தம்பிக்கு வள்ளியை திருமணம் செய்து வைத்த மகிழ்ச்சியில் நடனமாடி நர்த்தன விநாயகர்’ என்னும் திருநாமம் பெறுகிறார். இந்த வகையில் தைப்பூசம் சிவகுடும்பத்திற்கே திருநாளாக உள்ளது. திருத்தணியில் மட்டும் மாசி மாத பூசம் நட்சத்திரத்தன்று வள்ளி கல்யாணம் நடக்கும்.