தைப்பூசத்திருவிழா நமது சுமையை இறைவனிடம் ஒப்படைக்கும் நன்னாளாக உள்ளது. வாழ்க்கையில் மனிதன் பல கஷ்டங்களை அனுபவிக்கிறான். அதை சிலரிடம் சொல்லி ஆறுதல் தேட முயற்சிக்கலாம். ஆனால், அந்த சிலர் எந்தளவுக்கு நம்பிக்கைக்கு உரியவர்களாக இருப்பார்கள் என்பது சந்தேகம்.ஆனால், கடவுள் கல்லாயிருந்தாலும் கருணையோடு நம் குறையைக் கேட்பான். அவன் முன்னால் அமர்ந்து கண்ணீர் விட்டு, கவலையைத் தெரிவித்தால் நம் மனச்சுமை இறங்கி விடும். காவடி என்னும் தோளில் சுமக்கப்படும் சுமை. கந்தன் காலடியில் இந்தச் சுமையை இறக்கி வைக்கும் போது, நம் மனச்சுமையையும் சேர்த்து இறக்கி வைத்து விடலாம். அந்தச்சுமையை கந்தன் ஏற்றுக்கொண்டு நமது மனப்பளுவைக் குறைத்து விடுவான்.