சிறுதாவூர்: சிறுதாவூரில் அமைந்து உள்ளஇ பழமையான சிவன் கோவிலின் நிர்வாகம்இ அறநிலையத்துறை வசம் மாறியும் திருப்பணிகள் முடிக்கப்படாமல்இ கும்பாபிஷேகம் நடத்துதல்இ பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது. திருப்போரூர் அடுத்த சிறுதாவூர் கிராமத்தில்இ 1இ000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இ பூதகிரீஸ்வர் கோவில் அமைந்துள்ளது. கோவிலின் அருகேஇ பழமையான குளம் ஒன்றும் உள்ளது. மிக மோசமான நிலையிலிருந்த இவை இரண்டையும் சீரமைக்கும் விதத்தில்இ 2009ம் ஆண்டில் திருப்பணிகள் நடைபெற துவங்கின. சிலை திருட்டு இப்பணிகளைஇ இக்கிராமத்தின் வழிபாட்டுக் குழுவினர் மேற்கொண்டு வந்தனர். திருப்பணிகள் காரணமாகஇ கோவிலிலிருந்த விலை உயர்ந்த ஐம்பொன் சிலைகள்இ 2011ம் ஆண்டில் இதே பகுதியிலுள்ள பஜனை கோவிலில் வைக்கப்பட்டுஇ பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில்இ 2013ம் ஆண்டில் பஜனைக் கோவிலில் வைக்கப்பட்டிருந்தஇ ஐம் பொன்சிலைகளைஇ யாரோ திருடிச்சென்றனர். பின்இ போலீசாரால் மீட்கப்பட்டன. இதை யடுத்துஇ சிலைகள் அறநிலையத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டன. தற்போதுஇ கந்தசுவாமி கோவில் நிர்வாகம்இ சிறுதாவூர் கோவிலின் ஏலம் உள்ளிட்டஇ நிர்வாகப் பணிகளை கவனித்து வருகிறது. அறநிலையத்துறை யின்வசம்இ கோவில் நிர்வாகம் மாறிஇ மூன்றாண்டுகள் ஆகியும்இ பாதியில் நிறுத்தப்பட்டுள்ள திருப்பணிகள் மீண்டும் துவங்கப்படாமல் இருப்பதுஇ பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால்இ இக்கோவிலில் பல ஆண்டுகளாகஇ தொடர்ந்து நடை பெற்று வந்த பிரதோஷ வழிபாடுகள் தடைபட்டு நிற்பதாகவும்இ பக்தர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
எதிர்பார்ப்பு: எனவே இ அறநிலையத்துறையினர்இ தடை பட்டுள்ள இக்கோவிலின் திருப்பணிகளை விரைந்து முடித்துஇ கோவில் கும்பா பிஷேகத்தினை விரைவில் நடத்த வேண்டும் என்பதேஇ சிறுதாவூர் கிராமவாசிகள் மற்றும் பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.