திருவென்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் இந்திரப் பெருவிழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08பிப் 2017 01:02
நாகை: சீர்காழியை அடுத்த திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலின் ஆண்டு இந்திரப் பெரு விழா கொடியேற்றத்துடன் நேற்று இரவு தொடங்கியது.
சுவேதாரண்யேஸ்வரர் கோயில் காசிக்கு இணையான ஆறு கோயில்களில் முதன்மையான கோயிலாகும். இக்கோயிலில் சிவனின் முக்கண்ணிலிருந்து முன்று பொறிகள் மூன்று குளங்களாக மாறியதாக புராண வரலாறுகள் கூறுகின்றன. இங்கு கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கான முதற்கடவுளாக விளங்கும் புதன் தனிக்கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சிவபெருமானின் ஜந்து முகங்களில் ஒன்றான அகோரமுகம், இந்த கோயிலில் அகோரமுட;த்தியாக தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார். சுவேதாரண்யேஸ்வர ஸ்தலத்தில் எமனை சுவேதாரண்யேஸ்வரர் எவ்வாறு சம்காரம் செய்தாரோ அவ்வாறு கரதூஷனாதிகளை இராமன் சம்காரம் செய்தான் என வால்மீகி இராமயணத்தில் இத்திருக்கோயிலின் தொன்மை பற்றி கூறபட்டுள்ளது.
இந்த கோயிலின் ஆண்டு இந்திரப் பெரு விழா கொடியேற்றத்துடன் நேற்று இரவு தொடங்கியது. இதனைமுன்னிட்டு பஞ்ச முர்த்திகள் வீதியுலா காட்சி நடைபெற்றது. இதில கோயில் நிர்வாக அதிகாரி முருகையன், உ தவிஆணையர் பாலசுப்பரமணியம், தலைமை சிவாச்சாரியார் கந்தசாமிக்குருக்கள், தி.மு.க பிரமுகர்கள் சின்னப்பிள்ளை, உத்திரமுர்த்தி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 9 ம் தேதி எமசம்காரமும், வீரநடனமும், 11ம் தேதி இரவு 10 மணிக்கு அகோரமுர்த்தி மருத்துவ அசுரனை சம்காரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 13ம் தேதி இரவு 8 மணிக்கு திருக்கல்யாணமும், 14ம் தேதி மாலை ஆறுபத்து முன்று நாயன்மார்கள் வீதியுலாவும், 15 ம் தேதி காலை 9 மணிக்கு திருத்தோரட்டமும், 18ம் தேதி இரவு தெப்போற்சவமும் மற்றும் 19ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் முடிவடைகிறது.