திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான பழனி ஆண்டவர் கோயிலில் நாளை( பிப்.9) தைப்பூச திருவிழா நடக்கிறது. மலைக்குப்போகும் பாதையில்இ மலை அடிவாரத்தில் பழனி ஆண்டவர் கோயில் உள்ளது. அங்கு பழனி கோயில் மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள சுவாமி போன்று இங்கும் எழுந்தருளியுள்ளார். ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று மூலவருக்கு அபிஷேகங்கள்இ பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் நாளை காலை 10:30 மணிக்கு பல்வகை திரவிய அபிஷேகங்கள்இ பூஜைகள் நடக்கிறது. இரவு 7 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எழுந்தருளியுள்ள உற்சவர்கள் சுப்பிரமணிய சுவாமிஇ தெய்வானைஇ முத்துகுமார சுவாமிஇ தெய்வானை தனித்தனியாக புறப்பாடாகி வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலிப்பர். இரண்டு உற்சவர்கள் ஒரே நாளில் புறப்பாடாவது ஆண்டிற்கு ஒருமுறைஇ தைப்பூசத்தன்று மட்டுமே.