ராமேஸ்வரம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் உபகோயிலான ஸ்ரீ சம்மந்த விநாயகர், வீரபத்திரர் கோயில்களில் 6 லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் நடைபெற உள்ளது. இதற்கான பாலாலய பூஜை நேற்று நடந்தது. முன்னதாக இரு கோயில்கள் முன்பும் யாகசாலை பூஜைகள் நடந்தது. கோயில் இணை ஆணையர் செல்வராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகணன், உதவி ஆணையர் பாலகிருஷ்ணன், கண்காணிப்பாளர் ராஜாங்கம், கக்காரின், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன் உள்பட ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரு கோயில்களிலும் சேதமடைந்த கோபுர சிற்பங்கள், துாண்கள் மராமத்து செய்யும் பணி துவங்கி விரைந்து முடிக்கப்படும். பணி முடிந்ததும் மார்ச் 5ல் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.