பேய்க்குளம்:பேய்க்குளம் அருகே கட்டாரிமங்கலம் கோயிலில் மழை வேண்டி ருத்ர வரு ண ஜபவேள்வி நடக்கிறது.பேய்க்குளம் அருகே கட்டாரிமங்கலம் சிவகாமி அம்பாள் சமேத அழகிய கூத்தர் கோயிலில் நாளை (24ம் தேதி) திருக்கல்யாண ம் மற்றும் மழை வேண்டி ருத்ர வருண ஜபவேள்வி நடக்கிறது. முன்னதாக இன்று (23ம் தேதி) இர வு 7 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. நாளை பகல் 12 மணிக்கு ஹோமம் பூர்ணாகுதி, அபிஷேகம் நடக்கிறது. கயத்தார் குருஜீ ஈஸ்வரஐயர் யாக வேள்வியை முன்னின்று நடத்துகிறார்.