திருவெண்காடு புதன் பகவான் கோயில் தெப்போற்சவம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20பிப் 2017 11:02
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் திருவெண்காட்டில் ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வர கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் காசிக்குணையான ஆறுகோயில்களில் முதன்மையான கோயிலாகும். இந்த கோ யிலில் சிவனின் முக்கண்ணிலிருந்து, முன்று பொறிகள் முக்குளங்களாக மாறியதாக புராண வரலாறுகள் கூறுகின்றன.
இத்தலத்தில் கல்வி மற்றும் தொழில் வளர்ச்சிக்கான முதற்கடவு ளாக விளங்கும் ஸ்ரீ புதன் பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்து வருகிறார். சிவனின் ஜந்து முகங்களில் ஒன்றான அகோர முகம், இங்கு ஸ்ரீ அகோர மூர் த்தியாக தனிசன்னதி கொண்டு விளங்குகிறார். இத்தலத்தில் எமனை சுவேதாரண்யேஸ்வரர் எவ்வாறு சம்காரம் செய்தாரோ அவ்வாறு எதிரிகளை இராமன் சம்காரம் செய்தான் என வா ல்மீகி இராமயணத்தில் இத்திருக்கோயிலின் தொன்மையை விளக்கியுள்ளார். இந்த கோயிலின் ஆண்டு இந்திர பெருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 7ம் தேதி தொடங்கியது. விழா வின் முக்கிய நிகழ்வான தெப்போற்சவம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதனை முன்னிட்டு இரவு 11:30 மணிக்கு கேயிலில் இருந்து ஸ்ரீ பிரம்மவித்யாம்பிகை சமேத சுவேதார ண்யேஸ்வர சுவாமி புறப்பட்டு வந்து தெப்பத்தில் எழுந்தருளினர். இதையடுத்து சுவாமி, அம்பாளுக்கு குரு குருக்கள் சிறப்பு ஆராதனைகள் நடத்தினார். தொடர்ந்து தெப்பம் திருக்கு ளத்தை 5 முறை வளம்வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். தெப்போற்சவத்தை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த ப்ப ட்டிருந்தனர்.