மனிதன் நாகரீகமடைந்த காலமான கிருதயுகத்தில் உருவான இந்து தர்மம் ஆறு வழிபாட்டுமுறைகளைக் கொண்டது; இதையே ஷண்மதச்சாரியம் என்று நமது தேசத்தில் அழைத்தனர். கிருதயுகத்தில் இருந்த ஆறு வழிபாட்டு முறையானது, அடுத்து வந்த திரேதாயுகம், துவாபரயுகங்களில் மேலும் பல பிரிவுகளாகப் பிரிந்து கலியுகத்தின் துவக்கத்தில் பிரிவுகளாக நமது இந்தியா முழுவதும் பிரிந்துவிட்டன; இந்த வழிபாட்டுப்பிரிவுகளால் இந்து தர்மம் உள்பூசல்களால் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இதைச் சரி செய்ய காலத்தை இயக்கும் ஸ்ரீகாலபைரவப் பெருமான் திருவுளம் கொண்டார். இந்தியாவின் காலடியில்(கேரளா மாநிலத்தில் அமைந்திருக்கும் கிராமம் இது!) பிறந்த ஆதி சங்கரர் இந்தியா முழுவதையும் தனது வயதிற்குள் நான்கு முறை நடந்தே சுற்றி வந்தார்; இந்து தர்மத்தின் வழிபாட்டுப்பிரிவுத் தலைவர்கள், மடாதிபதிகள், துறவிகள், சாதுக்களை சந்தித்து உரையாடியும், வாதம் செய்தும், ஆன்மீகப் போட்டியிட்டும் மீண்டும் ஆறு வழிபாட்டுமுறைகளாக மாற்றினார்மீண்டும் நமது சனாதன தர்மத்தில் இருந்து வந்த உள்பூசல்கள் வழக்கொழிந்து உயிரோட்டமான நிலையை எட்டியது.