ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் நீத்தீஸ்வரர் சுவாமி கோவிலில் பக்தர்கள் உழவாரப்பணி செய்தனர். சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியைச்சேர்ந்த ஓம் சதுர்கால பைரவர் உழவாரப்பணி சிவனடியார்கள் திருக்கூட்டத்தினர் 60 பேர் ஸ்ரீமுஷ்ணம் நித்தீஸ்வரர் சுவாமி கோவிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவில் உள்பிரகாரம், மற்றும் கோவில் சுற்றுச்சுவர்கள், வெளிப்புறங்களில் இருந்த புல், செடிகளை அகற்றி உழவாரப்பணி செய்தனர்.