பதிவு செய்த நாள்
23
பிப்
2017
12:02
பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம், தண்ணீர் பந்தலில் உள்ள, பெரியநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. அதையொட்டி, இன்று காலை, 10:00 மணிக்கு கணபதி மற்றும் வாஸ்து பூஜை; மாலை, 6:00 மணியவில் கலசபூஜை, திரவிய ஹோமம் நடக்கிறது. இரவு, 10:00 மணியளவில் சக்தி அழைத்தல், முளைப்பாரி எடுத்தல், இரவு, 12:00 மணியளவில் பெரியாயி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கண் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. நாளை அதிகாலை, 4:00 மணியளவில் கலசபூஜை, 6:00 மணியளவில் கலச புறப்பாடு, 6:30க்கு மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்படும்.