Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விரும்பியதை அடையச் செய்யும் ... திகட்டாமல் இனிக்கும் பாடல்! திகட்டாமல் இனிக்கும் பாடல்!
முதல் பக்கம் » துளிகள்
கிருஷ்ணரை மதுசூதனா என்று அழைப்பது ஏன்?
எழுத்தின் அளவு:
கிருஷ்ணரை மதுசூதனா என்று அழைப்பது ஏன்?

பதிவு செய்த நாள்

07 மார்
2017
04:03

மகாபாரதத்திலும், கீதையிலும் பகவான் கிருஷ்ணர் பல இடங்களிலும் மதுசூதனா என்று அழைக்கப்படுகின்றார். அதிலும், அர்ஜுனனால் இப்படிப் பலமுறை அழைக்கப்படுகின்றார் கிருஷ்ணர். பகவான் கிருஷ்ணரின் ஒவ்வொரு திருநாமமும் சிறப்புக்குரியதுதான். குறிப்பாக மதுசூதனா என்ற திருநாமத்துக்குப் பல பொருள்கள் உண்டு. தேனுக்கு, மது என்ற பெயரும் உண்டல்லவா? தேனினும் இனியவர் கிருஷ்ணர் என்ற பொருளில், பாத வல்லபாச்சாரியார் தனது மதுராஷ்டகத்தில், அதரம், மதுரம் வதனம் மதுரம்... மதுராதிப தேர் அகிலம் மதுரம் என்று பாடுகிறார்.

குருக்ஷேத்ரப் போரில் தனக்கு ஏற்பட்ட சோகத்தை நீக்க அர்ஜுனன், கதம் பீஷ்மம் அகம்சங்க்யே த்ரோணம் மதுசூதன... என்று புலம்பி அழுகின்றான். இதன் பொருளாவது, எதிரிகள் பலரை அழித்தவரே... மது என்ற அரக்கனை வதைத்தவரே... என் பூஜைக்கு உரியவர்களான பீஷ்மர், துரோணர் முதலானோரை எப்படி என்னால் எதிர்த்திட முடியும்? என்பதே. பகவான் விஷ்ணுவின் செவிகளில் இருந்து பிறந்த இரண்டு அசுரர்கள், மது மற்றும் கைடபன், மகாலட்சுமியைத் துதித்து கடுமையான தவமிருந்த இவர்கள் இருவருரிடமும், அவர்கள் வேண்டும் வரம்யாது எனக் கேட்டாள் லட்சுமி. எங்களது மரணம் நாங்கள் விரும்பியபோது மட்டுமே நிகழ வேண்டும் என்ற வரத்தை இருவரும் பெற்றனர்.

கர்வம் மிகுந்த இரு அரக்கர்களும் பிரம்மதேவனைத்தாக்கி அவரிடமிருந்த நான்கு வேதங்களையும் கவர்ந்து சென்றனர். பிரம்மதேவன் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டு, உதவி கேட்டார். பிரகலாதனைக் காக்க நரசிம்ம அவதாரம் எடுத்தது போல, குதிரை தலையுடன் ஹயக்ரீவராக அவதரித்தார் மகாவிஷ்ணு. பணிவோடு இரு அரக்கர்களின் முன் சென்ற ஹயக்ரீவர், அவர்களிடம் தனக்கு ஒரு வரம் தர வேண்ட, தற்பெருமையில் மூழ்கியிருந்த இரு அரக்கர்களும், எந்த வரமானாலும் தருகிறோம் என்றனர். பகவான், உங்களுக்கு மரணம் ஏற்பட வேண்டும் என்ற வரத்தை வேண்டினார். சிந்திக்காமல், அவ்வாறே ஆகட்டும் என்ற இரு அரக்கர்களையும் சுலபமாக வதம் செய்தார் மகாவிஷ்ணு. இதனாலேயே, மதுசூதனா என போற்றப்படுகிறார் கிருஷ்ணர். இந்த லீலை கிருஷ்ணாவதாரத்துக்கு முன்பே நிகழ்ந்தது. தேவகியின் கர்ப்பத்தில் இருந்து கிருஷ்ணர் தோன்றியபோது அந்தத் தாய், மதுசூதனா என்று அவரைக் கொஞ்சினாளாம். மதுசூதனா! உங்களுடைய அவதாரத்தினால் நான் மேலும் கம்சனை நினைத்துக் கவலைப்படுகின்றேன். அந்தப் பாவி கம்சனுக்கு நீங்கள் பிறந்திருப்பதைப் புரிந்துகொள்ள முடியாதபடி செய்யுங்கள் என்று அந்த அன்னை பிரார்த்திப்பதை ஸ்ரீமத் பாகவதம் குறிப்பிடுகின்றது.

 
மேலும் துளிகள் »
temple news
நாட்டிய சாஸ்திரம் தெய்வீகமானது. கணபதி, சரஸ்வதி, காளி, கிருஷ்ணர் என்று பலரும் நடனமாடும் கோலத்தில் காட்சி ... மேலும்
 
temple news
தெட்சிணம் என்ற சொல்லுக்கு தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் உண்டு. ஞானத்தின் திருவுருவமாக அமர்ந்து ... மேலும்
 
temple news
முருகனுக்கு உரியது சஷ்டி விரதம். எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ... மேலும்
 
temple news
கருத் என்றால் சிறகு என்று பொருள். அழகிய சிறகுடைய பறவை என்பதால் கருடன் எனப்படுகிறது. பறவைகளுக்கு ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar