பரமக்குடி, பரமக்குடி முத்தாலம்மன் கோயில் படித்துறையில் அமைந்துள்ள, சக்தி குமரன் செந்தில் கோயிலின் மாசி மக பால்குட விழா நடந்தது. மார்ச் 8 காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளி கவசத்தில் சக்தி குமரன் அருள்பாலித்தார். மார்ச் 9 ல் மாலை 5 மணிக்கு குருவடியார் இலக்குமணன் தலைமையில் திருவிளக்கு வழிபாடு நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு கோயிலில் இருந்து பக்தர்கள் புறப்பட்டு பெருமாள் கோயில் படித்துறையில் பால்குடங்களை கட்டினர். வைகை ஆற்றில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்ட பால்குட ஊர்வலம் பஜார் உள்ளிட்ட முக்கிய வீதிகளில் வலம் வந்து கோயிலை அடைந்தது. சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இரவு 7 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் முருகன் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் வீதிவலம் வந்தார். தொடர்ந்து மார்ச் 12 காலை 41 வது ஆண்டாக செந்திலாண்டவன் மிதிவண்டிப் பயணக்குழுவினர் நுாற்றுக்கணக்கானோர் திருச்செந்துாருக்கு சைக்கிளிலில் செல்லவுள்ளனர்.