திருப்பதி: திருமலையில், ஐந்து நாட்களாக நடந்து வந்த தெப்போற்சவம், நேற்றுடன் நிறைவு பெற்றது. திருமலை ஏழுமலையான் கோவிலில் மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, ஐந்து நாட்களாக தெப்போற்சவம் நடந்து வந்தது. நிறைவு நாளான நேற்று, கோவில் திருக்குளத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி, ஏழு முறை வலம் வந்தார். இதைக் காண, ஆயிரக்கணக்கான பக்தர்கள், திருக்குளக்கரையில் கூடினர். இதையொட்டி, பவுர்ணமி அன்று நடக்கும் கருட சேவையை, தேவஸ்தானம் ரத்து செய்தது.