செஞ்சி: செஞ்சி அருகே செத்தவரை மோனசித்தர் ஆசிரமத்தில் பவுர்ணமியை யொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தது. செத்தவரை - நல்லாண்பிள்ளை பெற்றால் கிராமத்தில் அமைந்துள்ள மோன சித்தர் ஆசிரமத்தில் உள்ள மீனாட்சி அம்மன் உடனுறை சொக்கநாத பெருமாள் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று காலை 11.00 மணிக்கு சிவஜோதி மோன சித்தர் தலைமையில் சிறப்பு ேஹாமம், சொக்கநாதருக்கு கலசாபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.