பதிவு செய்த நாள்
02
நவ
2011
11:11
நகரி:திருப்பதியில் நவ., 3ல் புஷ்பயாக வைபவம் நடைபெறுகிறது.வெங்டேச பெருமாளின் ஜென்ம நட்சத்திரமான திருவோண நட்சத்திர தினத்தில், ஆண்டு தோறும் திருமலை கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக எழுந்தருளும் மலையப்பசுவாமிக்கு, புஷ்பயாகம் நடத்தப்படுகிறது.இதன்படி, நாளை இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. வாசனை மலர்கள் இருபது முறை மலையப்ப சுவாமியின், நெஞ்சு பகுதி மறைக்கும் அளவிற்கு கோவில் அர்ச்சகர்கள், புஷ்பங்களால் அர்ச்சனை செய்வர். பின்னர் உற்சவருக்கு ஆரத்தி, ஆராதனை நடைபெறும்.
வனபோஜன உற்சவம்: புஷ்பயாகத்தையொட்டி இன்று, இரண்டாம் திருமலையில் வசந்த உற்சவம், சகஸ்ரதீபாலங்கார சேவை ரத்து செய்யப்படுகிறது. நாளை திருப்பாவாடை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, பிரம்மோற்சவம் போன்ற ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வரும் 7ம் தேதி திருமலையில் பாபவிநாசனம் அருகில் உள்ள பரிவேட்டை மண்டபத்தில், வனபோஜன உற்சவம் நடைபெறும்.