பெத்தநாயக்கன்பாளையம்: ஏத்தாப்பூர் வசிஷ்ட நதிக்கரையில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில், நேற்று, மூன்றாம் முறையாக பூச்சாட்டு விழா நடந்தது. அதையொட்டி, காலை, 11:00 மணிக்கு, கல்லேரிப்பட்டியை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், தட்டில் உதிரி பூக்கள் வைத்து, முக்கிய வீதிகள் வழியாக, கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின், மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.