பதிவு செய்த நாள்
27
மார்
2017
01:03
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் பண்ணாரியம்மன் குண்டம் விழாவை முன்னிட்டு, போலீஸ் சார்பில் சிறப்பு ஏற்பாட்டு பணிகள் தொடங்கியுள்ளன. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த, பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில், ஏப்., 10ல் குண்டம் திருவிழா நடக்கிறது. இன்று (மார்ச், 27) பூச்சாட்டுதல் நடக்கிறது. திருவிழாவில் பங்கேற்க, கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம் மற்றும் கர்நாடகா மாநில பக்தர்களும் ஆயிரக்கணக்கில் வருவர். தீ மிதி விழா நடக்கும் நாளில், பக்தர்கள் வாகனங்களை நிறுத்தவும், வரிசையில் நின்று தரிசனம் செய்வதற்கும், சத்தியமங்கலம் போக்குவரத்து போலீஸ் சார்பில், சிறப்பு ஏற்பாடு பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.