கீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் பிரதோஷ விழா நடந்தது. சங்கடங்களை தீர்க்கும் சனி பிரதோஷம் அரிதாக வருகிறது. மாலை 4:30 முதல் 6:00 மணி வரை 18 வகையான மூலிகை அபிஷேகம் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர். சாயல்குடி: மாரியூர் பூவேந்தியநாதர் சமேத பவளநிற வள்ளியம்மன் கோயிலில் சனி பிரதோஷம் கோலாகலமாக நடந்தது. மூலவர் மற்றும் நந்தி பகவானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாலையில் அன்னதானம் நடந்தது, ஏற்பாடுகளை மகாசபை பிரதோஷ கமிட்டியினர் செய்திருந்தனர்.
சிக்கல்: மேலக்கிடாரத்தில் உள்ள பழமையான திருவனந்தீஸ்வரர் கோயிலில் பிரதோஷம் நடந்தது. ஏற்பாடுகளை மாதாந்திர விழாக்குழுவினர் செய்திருந்தனர். டி.எம்.கோட்டையில் உள்ள செஞ்சடைநாதர் சமேத கருணாகடாச்சி அம்மன் கோயில், சாயல்குடி கைலாசநாதர் சமேத மீனாட்சியம்மன் கோயில் ஆகிய இடங்களில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.