பதிவு செய்த நாள்
02
நவ
2011
11:11
கும்பகோணம்: சுவாமிமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி பெருவிழாவினை முன்னிட்டு நேற்று இரவு சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.முருகனின் ஆறுபடைவீடுகளில் நான்காவது படைவீடாக கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் திகழ்கிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்புடைய இக்கோவிலில் தந்தைக்கு ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உபதேசித்த குருமூர்த்தியாக சுவாமிநாதசுவாமி திகழ்வதால் அவர் சிவகுருநாதனாக காட்சியளிக்கிறார்.இண்த்தகைய சிறப்புடைய சுவாமிநாத சுவாமிக்கு கந்த சஷ்டி திருவிழா கடந்த 25ம்தேதி பூர்வாங்க பூஜையுடன் தொடங் கியது. கடந்த 26ம்தேதி கந்தசஷ் டி விழாவின் தொடக்கமாக சண் முகசுவாமி சந்திரசேகரர் நவவீர ர்களுடன் மலைக்கோவிலில் இ ருந்து படி இறங்கி உற்சவ ம ண்டபத்திற்கு எழுந்தருளினார்.கடந்த 27ம் தேதி முதல் காலையிலும், இரவிலும் படிச் சட்டத்தில் சுவாமி வீதிஉலா வந் து பக்தர்களுக்கு அருள்பாலி த்தார். முக்கிய திருவிழாவான க ந்தசஷ்டி தினமான நேற்று அதி காலை கோயில் நடை திறக் கப்பட்டது. மூலவர் சுவாமிநா தசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, ராஜ அலங்காரத் தில் காட்சியளித்தார். தொடர்ந்து காலை 10.30மணி க்கு வசந்த மண்டபத்தில் உள்ள சண்மு கசுவாமிக்கு 108சங்காபிஷேக அர்ச்சனை நடந்தது. நேற்றுமுன் தினம் அதிகா லை முதல் ஏராள மான பக்தர்கள் சுவாமிநாதசுவா மியையும், சண்முகசுவாமிø யயும் வழிபட்டனர்.தொடர்ந்து மாலை கோயில் தென்புற சன்னதியில் சண்முக சுவாமி அம்பாளிடத்தில் தி÷ வல் வாங்கும் கழ்ச்சியும் நடை பெற்று, முன்னதாக சுந்தரபெ ருமாள் கோவிலிலிருந்து பக்தர் கள் நவவீரர்கள் வேடமிட்டு ஊர்வலமாக சுவாமிமலை வந்த டைந்தனர்.அவர்கள் நான்கு வீதி களையும் சுற்றி வந்து சுவாமிநா தசுவாமியை வழிபட்டு சண் முகசுவாமியுடன் சூரனை வதம் செய்ய புறப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு சண்முகசுவா மி சூரனை வதம் செய்யும் சூர சம்ஹாரம் கழ்ச்சி நடந்தது இதி ல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பின்னர் தங்கமயில் வாகனத்தில் சண்முகசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இவ்விழாவில் முன்னாள் அமைச்சர் அய்யாறு வாண்டைய õர், கோயில் துணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் தென் னரசு, மாவட்ட பஞ்., குழு உறு ப்பினர் குழந்தைவேலு உள்ளிட் டோர் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து நேற் று காலையில் காவிரியில் தீர்த்த வாரி நடந்தது. இரவு 7மணிக்கு மேல் 8.30 மணிக்குள் தேவசே னா திருக்கல் யாண ம் நடந்தது. இன்று நவ.2 ம் தேதி மற்றும் 3ம் தேதியன்று இரவு 8மணிக்கு பல்லக்கில் சுவாமி வீதியுலாவு ம்நடக்கிறது. நவ.5ம்தேதி கந்த சஷ்டி திரு விழா முடிந்து சண் முகசுவாமி மலைக்கோவிலுக்கு சேருதல் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் மற்றும் இணை ஆø ணயர் செல்வராஜ், துணை ஆø ணயர் மற்றும் செயல் அலுவலர் தென்னரசு, மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.